புதுசு புதுசா கிளம்புறாய்ங்களே... சைக்கிள் திருடன் வீடியோ வைரல்...

புதுசு புதுசா கிளம்புறாய்ங்களே... சைக்கிள் திருடன் வீடியோ வைரல்...

சைக்கிளை மட்டும் குறி வைத்து திருடும் திருடனின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Published on

செங்கல்பட்டு | மறைமலைநகர் அருகே சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு தென் மாவட்டத்திலிருந்தும் வடமாநிலத்தில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் இங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்இதற்கிடையே சைக்கிளை திருடி வட மாநில இளைஞர்களுக்கு விற்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மறைமலைநகர் நந்தனார் தெரு பகுதியில் புதிய செருப்பு கடை வைத்து நடத்தி வருபவர் ஏழுமலை இவர் உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சைக்கிளில் சென்று உள்ளார் பின்பு உணவு அருந்திவிட்டு வெளியே வந்து பார்த்தபோது சைக்கிள் திருடு போனது தெரியவந்தது.

இந்நிலையில் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பட்ட பகலிலே லாவகமாக இளைஞர் ஒருவர் சைக்கிளை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது கடந்த 1 வாரத்திற்கு முன்பாக அதே பகுதியில் மூன்று சைக்கிள் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சைக்கிளை மட்டும் குறி வைத்து திருடும் திருடனின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com