சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஐடி பேராசியர்கள் 2 பேருக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வேதியியல் துறை பேராசிரியர்கள் இருவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஐடி பேராசியர்கள் 2 பேருக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை ஐ.ஐ.டி.யில் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பி.எச்.டி. படித்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த மாணவி ஒருவர்,

தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். புாகரின் அடிப்படையில் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வேதியியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் ஜி. எடமன பிரசாத், ரமேஷ் எல். கர்தாஸ் ஆகியோர் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு இரண்டு பேராசியர்களுக்கும் சிபிசிஐடி காவல்துறையினருக்கு தெரியாமல் சென்னையை விட்டு செல்லக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com