சிவராத்திரியை முன்னிட்டு கோயிலுக்கு செல்வதாய் கூறி பணம் வசூலித்த திருநங்கைகள் டாஸ்மாக்கில் மது அருந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருநங்கைகள் சமுதாயத்தில் அனைவருக்கும் முன்னோடியாக திகழ வேண்டும் என பல்வேறு தரப்பினர் ஆதரவுக்குரல்கள் அளித்து வந்தாலும், இப்படியான சில அசம்பாவிதங்கள் நிகழ்வது ஏன்?
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திருநங்கைகள் சிலர் கடைகளுக்கு சென்று பணம் வசூலித்து அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 18-ம் தேதியன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது என்பதால், திருநங்கைகளான இவர்கள், ஊரெங்கும் பணம் வசூலித்து வந்தனர்.
சிவனுக்கு காணிக்கை எனக் கூறப்பட்ட இந்த பணத்தை கோயிலுக்கு செலவழிக்காமல் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுஅருந்தி போதையில் ருத்ர தாண்டவம் ஆடி வந்துள்ளனர் இந்த திருநங்கைகள். போதை தலைக்கேறியும் அது போதாது என கிளம்பியவர்கள் மீண்டும் வசூல் வேட்டையில் இறங்கி, பாஸ்ட்புட் கடைக்குள் புகுந்தனர்.
ஆளுக்கொரு சிக்கன் ரைஸ் பார்சல் போட்டு விட்டு நன்கொடை கேட்டதற்கு அந்த கடைக்காரரின் மனைவி பத்து ரூபாய் அளித்துள்ளார். ஆனால் தங்களுக்கு பத்து ரூபாய் போதாது என்று ஆத்திரமடைந்த திருநங்கைகள், மேற்கொண்டு பணம் கேட்டு நச்சரித்தனர். பின்னர் கடையில் அனைவர் முன்னிலையிலும் தங்கள் ஆடைகளைக் கிழித்து அரை நிர்வாணமாக நின்ற திருநங்கைகள், பணம் கொடுத்தால்தான் போவோம் எனக் கூறி கடைக்காரரையும், அவரது மனைவியையும் சரமாரியாக தாக்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் சிறிதளவு பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு இந்த சம்பவத்தை நிகழ்த்திய திருநங்கைகள் மீது துறையூர் போலீசில் புகார் அளித்தனர்.
மூன்றாம் பாலினத்தவர்கள் என்றால் சமுதாயத்தில் இழிவாக நடத்தப்படுவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் வாடிக்கையாகி வருகிறது. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் திருநங்கைகள் நல்ல முறையில் படித்து கவுரவமான பணியில் அமர்ந்து பிறருக்கு முன்னோடியாக திகழ்கின்றனர். ஆனால் பெரும்பாலான திருநங்கைகளுக்கு வேலையும் கிடைக்காமல் தேவையற்ற வழிகளில் செல்வதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படிக்க: காதலர் தினத்தில் புதிய உத்திகளை கையாளவுள்ள திரையரங்குகள்......