ரூட் தல: இரு பிரிவு மாணவர்களிடையே கல்வீச்சு தாக்குதல்... பயணிகள் காயம்!!

ரூட் தல: இரு பிரிவு மாணவர்களிடையே கல்வீச்சு தாக்குதல்... பயணிகள் காயம்!!
Published on
Updated on
1 min read

சென்னை பேசின் பாலம், வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே இரு கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல பிரச்னையால், அவ்வழியாக சென்ற விரைவு ரயில் மீது கல்விசி தாக்குதல் 4 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

நேற்று மதியம், சென்னை சென்ட்ரலிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில், பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கிடையே வரும்போது, கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட ரூட் தல பிரச்னையில் கல்வீச்சு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த கல்வீச்சு சம்பவத்தில் D1,D2,  முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பயணிகள் நால்வருக்கு தலை, கை விரல்கள், கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்த நிலையில் மதியம் 3.32 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையம் வந்தடைந்தது. 

நடைமேடையில் தயாராக இருந்த அரக்கோணம் கோட்ட ரயில்வே மருத்துவமனை மருத்துவர் விக்னேஷ் குழுவினர், காயம் ஏற்பட்ட பயணிகளுக்கு முதலுதவி அளித்துள்ளனர். இதனையடுத்து ரயில் 13 நிமிடங்கள் காலதாமதமாக திருப்பதி நோக்கி புறப்பட்டது. இச்சம்பவம் குறித்து சென்னை பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து திவீர விசாரனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல பிரச்னையால் அடிக்கடி கத்தி குத்து, கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதால் ரயில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இதனை இரும்புகரம் கொண்டு ரயில்வே போலீசார் அடக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com