சக மாணவன் மீது வன்முறை... கல்லூரி பேருந்தில் பயங்கரம்!

சக மாணவன் மீது வன்முறை... கல்லூரி பேருந்தில் பயங்கரம்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்லூரி வேனில் சென்ற மாணவனை சக மாணவர் கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் நித்தீஷ் குமார். இவர் குளித்தலை அருகே புலியூரில் உள்ள செட்டிநாடு இன்ஜினியரிங் என்ற தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு வேனில் சென்ற போது அதே கல்லூரியில் எம்பிஏ படிக்கும் சக மாணவரான  அண்ணாமலையிடம், நித்தீஷ்குமார் பேச மறுத்து அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நித்தீஷ் குமாரின் கழுத்தை அறுத்துள்ளார்.  

அலறல் சத்தம் கேட்டு வேனை நிறுத்திய ஓட்டுனர், விரைந்து செயல்பட்டு, படுகாயமடைந்த நித்தீஷை மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கும் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கழுத்து பகுதியில் 12 தையல்கள் போடப்பட்டது. 

அதன் பின்னர் மாணவர் அண்ணாமலையை  கைது செய்த நிலையில், தன்பாலின ஈர்ப்பு காரணமாக கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.