குடோனில் கொள்ளையடிக்க சதித்திட்டம்... பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது...

பரமத்திவேலூர் அருகே கோரைப்பாய் குடோனில் கொள்ளையடிப்பதற்காக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்த ஐந்து நபர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர் போலீசார்.
குடோனில் கொள்ளையடிக்க சதித்திட்டம்... பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது...

நாமக்கல் மாவட்டம் பரமத்தி போலீசார் அதிகாலை பரமத்தியிலிருந்து பில்லூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பில்லூர் செல்லும் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனகள் நிற்பதையும் அங்கு ள்ள மறைவான இடத்தில் இருந்து பேச்சு சத்தம் கேட்பதையும் மறைந்திருந்து பார்த்துள்ளனர். 

அப்போது மறைவான இடத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள் மாவுரெட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கோரைப்பாய் குடோனின் கதவை உடைத்து கொள்ளை அடிப்பது குறித்து பேசிக்கொண்டு இருந்தை போலீசார் பார்த்துள்ளனர்.  இதனையடுத்து அங்கு இருந்த கொள்ளையர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து பரமத்தி போலீஸ்  நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் கோரைப்பாய் குடோன் கதவை உடைத்து கொள்ளையடிக்க வந்தாக  ஒப்புக்கொண்டனர். அதனையடுத்து மதுரை மாவட்டம், விளாங்குடியைச் சேர்ந்த திருப்பதி, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த கோபிநாத், பரமத்தி இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்த ஸ்டீபன்ராஜ், அதே பகுதியை சேர்ந்த  ஹேமந்த் குமார், சுனாமி(எ) விஜயகுமார் ஆகிய 5 பேர்களையும் கைது செய்தனர். 

மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு மொபட்,ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் அரிவாள், கத்தி, சுத்தியல், இரும்பு ராடு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் வேறு கொள்ளை சம்பவங்களில் எதுவும்  தொடர்பு உடையவர்களா என்பது குறித்தும் பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com