நாட்டு வெடி குண்டு வீச்சு - 5 பேர் கைது

விழுப்புரம் அருகேயுள்ள கண்டம்பாக்கம் ரயிலடி வாயிலில் உறங்கி கொண்டிருந்தவர் மீது வெடி குண்டு வீசிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  

விழுப்புரம் கண்டம்பாக்கத்தை சேர்ந்த நாராயணசாமி என்ற ரவுடி  அந்த பகுதியில் உள்ளவர்களிடம் சண்டையிடுவது கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த நாரயணசாமி கண்டம்பாக்கம் ரயிலடி வாயிலில் உறங்கி கொண்டிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தது மட்டும் அல்லாமம், அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய அதே கிராமத்தை சேர்ந்த மாதேஷ் முருகையன், புதுவை மாநிலத்தைச் சேர்ந்த தமிழரசன் கார்த்தி வசந்தகுமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள நாரயணசாமியை தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com