அழுகிய நிலையில் கிடைத்த ஆண் சடலம்... கள்ளத்தொடர்பால் நேர்ந்த கொலையா என்ற சந்தேகம்...

கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட காண்ட்ராக்டர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழுகிய நிலையில் கிடைத்த ஆண் சடலம்... கள்ளத்தொடர்பால் நேர்ந்த கொலையா என்ற சந்தேகம்...
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி : பேட்டை பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை வரும் மர்மமான முறையில் ஒரு கார் அனாதையாக நின்று கொண்டிருந்தது. அந்தக் காரை பேட்டை போலீசார் மீட்டு காரின் உரிமையாளர் யார் என விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பேட்டை சத்யா நகர் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக சம்பவ இடத்திற்கு நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அழுகிய நிலையில் கடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நெல்லை டவுன் காவல் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் ஜேக்கப் ஆனந்தராஜ் என்பவர் மாயமானதாகவும் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என புகார் செய்யப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டையில் மீட்கப்பட்ட கார் ஜேக்கப் ஆனந்தராஜின் கார் என்பது தெரியவந்தது இந்நிலையில் காட்டுப்பகுதியில் பிணமாக கடப்பது மாயமான ஜேக்கப் ஆனந்தராஜ் தானா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஜேக்கப் ஆனந்தராஜுக்கும் நெல்லை டவுன் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது இந்த விவகாரத்தில் காரில் கடத்தப்பட்டு ஜேக்கப் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com