தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட தீயணைப்புத்துறை துணை இயக்குநர்... 

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட தீயணைப்புத்துறை துணை இயக்குநர்... 
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா தண்டலம் பகுதியில் இயங்கிவரும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள உயர் மாடி கட்டிடங்களுக்கு தீயணைப்புத்  துறையினரால் வழங்கப்படக் கூடிய உயர்வகை கட்டட தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்க, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணகுமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்திய கூட்டு ஆய்வு நடத்தினர். 

தடையில்லா சான்றிதழ் வழங்க வேலூர் மண்டல துணை இயக்குனர் சரவண குமாருக்கு பணம்  வழங்க வேண்டும் என கூறி காஞ்சிபுரம் மாவட்ட  தீயணைப்புத்துறை அலுவலர் குமார், தனியார் மருத்துவக் கல்லூரி  பிரதிநிதியிடம்  மூன்று லட்ச ரூபாய்  லஞ்ச பணத்தை கேட்டு, முதல் தவணையாக தொகையாக  ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை  அட்வான்ஸ் ஆக கேட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார் பேரம் பேசி லஞ்சம் கேட்கும் வீடியோ தற்போது சமுக வலைதளங்களில்  வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com