சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்.... மயிலாப்பூரில் கைது.....

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்.... மயிலாப்பூரில் கைது.....

தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்களை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு:

தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்களை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஏற்கனவே தமிழக பிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய காவல் துறை அதிகாரிகள் மூலம் போதைப் பொருட்கள் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பல ஆயிரக்கணக்கான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அவற்றை கடத்திய நபர்கள் மற்றும் விற்பனை செய்கின்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து வருகின்றனர். 

செண்ட்ரல் நிலையம்:

இந்த நிலையில் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழக்கம்போல் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அதில் தன்பாத் விரைவு விரைவில் வந்த பயணியை சோதனை செய்தபோது அவரிடம் 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. 

விசாரணையும் கைதும்:

உடனடியாக அந்த நபரை விசாரணை செய்த ரயில்வே போலீசார் சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பதும் விஜயவாடாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது.  உடனடியாக ரயில்வே காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையிலான போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com