சென்னை அடுத்த ஒட்டியம்பாக்கம் அரசங்கழனி இடையே தனியார் பள்ளி மினி பேருந்து மாணவர்களை இறக்கிவிட்ட பின்னர் சாலையில் திரும்பும்போது அதிவேகத்தில் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் அதிவேகமாக சென்றதால் வாகனத்தை காட்டுக்குள் கொண்டுவர முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இரத்த காயங்களுடன் இருந்த இருவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | டிப்பர் லாரி மீது பைக் மோதி விபத்தில் தாய், குழந்தை பலி...
மேலும் தகவல் அறிந்த பெரும்பாக்கம் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த பள்ளி மினி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அருகில் பாதுகாப்பிற்காக அடுக்கு மாடி குடியிருப்பில் போருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பட்டாசு கடையில் தீ விபத்தில் தந்தை மகன் பலி...