சென்னையை பிரபல பெண் கஞ்சா வியாபாரி கைது!

கஞ்சா வழக்கில் கடந்த 8ம் தேதி சிறை சென்று விட்டு பெயிலில் வெளியே வந்த நிலையில் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல பெண் கஞ்சா வியாபாரியை மதுவிலக்கு அமலாக்கத் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதிக்கு உட்பட்ட கேபி பார்க் பகுதியை சேர்ந்த பிரபல பெண் கஞ்சா வியாபாரி வேலழகி(63) கடந்த எட்டாம் தேதி பேஷன்பிரிட்ஜ் போலீசாரால் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

 இந்நிலையில் சிறையில் இருந்து வெயிலில் வெளியே வந்த வேலழகி மீண்டும் தனது விற்பனையை தொடங்கும் விதமாக ஆந்திராவில் இருந்து ரயில் மூலமாக மூன்று கிலோ கஞ்சாவை வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்வதாக, அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வேலழகியை கையும் களவுமாக பிடித்தனர்.

 விசாரணையில் வேலழகி மீது கொலை முயற்சி கஞ்சா கடத்தல் விற்பனை என 55க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது அவர் மீது வழக்கு பதிவு செய்த அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com