சென்னை கேகே நகரை சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷ் வெட்டிக் கொலை...!!

சென்னை கேகே நகரை சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷ் வெட்டிக் கொலை...!!

சென்னை கேகே நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ரமேஷ் என்கிற முன்டகட்டி ரமேஷ்.  விசிக கட்சியில் உறுப்பினராக உள்ள ரவுடி ரமேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  ரவுடி ரமேஷ் மீது, கோடம்பாக்கம், எம்கேபி நகர், எம்ஜிஆர் நகர், கேகே நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை ,கொள்ளை முயற்சி, வழிப்பறி  உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இன்று காலை 8 மணியளவில் ரவுடி ரமேஷ் கேகே நகர் பாரதிதாசன் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள பெட்டிக்கடையில் டீ அருந்த சென்றுள்ளார். 

பின்னர் அங்கு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது காரில் முகமுடி அணிந்து வந்த கும்பல் ஒன்று ரவுடி ரமேசை பெட்டிகடை வாசிலில் வைத்து ஒட ஒட வெட்டி கொலை செய்து விட்டு பின்னர் காரில் தப்பி சென்றது.

இதில் ரவுடி ரமேஷ் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர் உடனே எம்ஜிஆர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த போலீஸார் உயிரிழந்த ரவுடி உடலை மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி் வைத்தனர்.  பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து  தப்பி ஓடிய முகமுடி கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com