மைனா திரைப்படத்தின் தயாரிப்பாளர் கைது!!

மைனா திரைப்படத்தின் தயாரிப்பாளர் கைது!!
Published on
Updated on
1 min read

சென்னையில் நில மோசடி வழக்கில் ஈடுபட்ட திரைப்பட தயாரிப்பாளரான போலீசாரால் ஜான் மேக்ஸ், நிலா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜான் மேக்ஸ். இவர் மைனா, சாட்டை உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் வேப்பம்பட்டில் உள்ள 1905 சதுர அடி கொண்ட நிலத்தினை, திருவள்ளுரை சேர்ந்த மோகன வேல் என்பவருக்கு 9 லட்சம் ரூபாய் பணம் பெற்று கொண்டு பவர் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், ஓரிரு மாதத்தில் அவர் வழங்கிய பொது அதிகாரத்தை ரத்து செய்து விட்டு, நிலத்தின் பத்திரத்தையும் வாங்கி சென்று உள்ளார். இதன் பின்னர் அதே இடத்தை தமிழ் செல்வன் என்கின்ற மற்றொரு நபருக்கு பொது அதிகாரம் வழங்கி, ஹதராபாத்தை சேர்ந்த நபருக்கு விற்பனை செய்து உள்ளார்.மோகனவேல் அந்த நிலத்தை விற்பனை செய்ய முயன்ற போது பொது அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது அறிந்து அதிர்ச்சிஅடைந்துள்ளார். 

பின்னர் இது குறித்து ஜான் மேக்ஸிடம் தனது பணத்தை கேட்டுள்ளார். அவர் பணத்தை திருப்பி தராமல் அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மோகன வேல் ஆவடி காவல் அணையரகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்துள்ளார். 

புகாரை பெற்று கொண்டு வழக்கு பதிவு செய்த போலீசார் விருகம்பாக்கத்தில் பதுங்கி இருந்த ஜான் மேக்ஸை, கைது செய்து விசாரானை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பண மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com