அரசு பேருந்து மீது வனத்துறை ஜீப் மோதி விபத்து!!!

அரசு பேருந்து மீது வனத்துறை ஜீப் மோதிய விபத்தில் ஓட்டுநருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு பேருந்து மீது வனத்துறை ஜீப் மோதி விபத்து!!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள அரிய பெருமானூர் பகுதியில் சேராப்பட்டு வனத்துறை அலுவலகத்தில் இருந்து வனத்துறை அதிகாரிகளை ஏற்றுக்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஜீப் ஓட்டுனர் சம்பத் தனக்கு முன்னாள் சென்ற வாகனத்தை முந்தமுட்பட்டபோது எதிரே கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து சங்கராபுரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

மேலும் படிக்க | சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து...

அந்த பேருந்து மீது ஜீப்பின் பின் பக்கம் மோதி சாலையோர மரத்தின் மீது மோதாமல் நின்றதால் லேசான காயத்துடன் ஜீப்பில் பயணம் செய்த ஓட்டுனர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உயிர் பிழைத்தனர்.

மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் விபத்துகுள்ளானதால் இறக்கிவிடபட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காயமடைந்த ஓட்டுனர் சம்பத் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க | அதிகரிக்கும் மின்விபத்துகள்.... நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?!!!