மரக்கடைக்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய வனத்துறை அதிகாரி...  வைரலாகும் லஞ்சம் வாங்கும் வீடியோ...

காஞ்சிபுரத்தில் வனத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மரக்கடைக்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய வனத்துறை அதிகாரி...  வைரலாகும் லஞ்சம் வாங்கும் வீடியோ...
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில்  காஞ்சிபுரம் சரக வன  அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராமதாஸ். காஞ்சிபுரம், வாலாஜாபாத், பகுதியில் உள்ள வனங்களைப் பாதுகாத்து கண்காணித்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

காஞ்சிபுரம் வாலாஜாபாத் பகுதிகளில் செயல்படும் மரக் கடைகளில், வனங்களில் இருந்து மரங்கள் வெட்டி கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணித்து மரக்கடை நடத்த உரிய தடையில்லா சான்று வழங்கிட வேண்டும்.  காஞ்சிபுரம் வாலாஜாபாத் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கடைகள் இயங்கி வருகின்றது. இந்த மரக்கடைகளுக்கு தடையில்லா சான்று வழங்க வன சரகர் ராமதாஸ்  ஆயிரக்கணக்கில் பணத்தை லஞ்சம் வாங்குவதுமாகவும், ஒவ்வொரு கடைகளிலும் மாதா மாதம் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிகிறது.

மரக்கடை ஒன்றில் வனச்சரக அலுவலர் ராமதாஸ் லஞ்சம் வாங்குவதும், குறைவாக பணம் கொடுக்கும் நபரிடம் பேரம் பேசுவதும் ஆக வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாதம் லஞ்சம் பணத்தை வன அதிகாரி ராமதாஸ் லஞ்சம் வாங்கும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைய தளத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புதுறை அலுவலர் குமார் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்டுத்திய நிலையில் தற்போது வன சரகர் ராமதாஸ் லஞ்சம் வாங்கும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com