ரைஸ் புல்லிங் மிஷின்... சதுரங்க வேட்டை பட பாணியில் ஒரு மோசடி!!

ரைஸ் புல்லிங் மிஷின்... சதுரங்க வேட்டை பட பாணியில் ஒரு மோசடி!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தில் வீடு வாடகை எடுத்து சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் இரிடியம் கண்டுபிடிக்க ரைஸ் புல்லிங் மிஷின் என கூறி ஏமாற்றி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவரின் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிக அளவில் கடன் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சங்கர் கணேஷ், அவரது நண்பர் மூலமாக சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் ரைஸ் புல்லிங் மிஷின் வாங்கி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் வந்தவாசி அடுத்த அளத்துரை கிராமத்தை சேர்ந்த காண்டிபன் மற்றும் திருவண்ணாமலை நல்லவன் பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் ஆகியோர், வந்தவாசி அடுத்த ஆர்யாத்தூர் கிராமத்தில் வாடகை வீடு எடுத்து சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் இருடியம் கண்டுபிடிப்பதற்காக ரைஸ் புல்லிங் மிஷின் வைத்துக்கொண்டு பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

இதையடுத்து சங்கர் கணேஷ் ரைஸ் புல்லிங் மெஷின் வாங்குவதற்கு ரூபாய் 20 ஆயிரம் கொடுத்துள்ளார். அப்போதுதான் சங்கர் கணேஷுக்கு இது போலி என்று தெரியவந்தது. பின்னர் உஷாரான சங்கர் கணேஷ் 
சந்தேகமடைந்த நிலையில் கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரை பெற்ற போலீசார் வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் உத்தரவின் பேரில், ஆய்வாளர் பாலு உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் ஆரியாத்தூர் கிராமத்திற்கு சென்று அங்கு வாடைகை வீடு எடுத்து தங்கி  இருந்த காண்டிபனை கைது செய்து ரைஸ் புல்லிங் மிஷின் மற்றும் உபகரணங்களை கைப்பற்றினர்.

மேலும் போலீசார் வருவதை அறிந்து  அங்கு இருந்து தப்பி ஓடிய குணசேகரனை விரட்டி பிடித்து கைது செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க || ஐபோன் 15 சீரிஸில் Bezel less display!!