பைபாஸ் ஆலையில் ராட்சத லாரி கவிழ்ந்து விபத்து...

பைபாஸ் ஆலையில் ராட்சத லாரி கவிழ்ந்து விபத்து...

மீஞ்சூரில் இருந்து குன்றத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்காக சிமெண்ட் உடன் கலந்து கட்டுமானத்திற்கு கட்ட பயன்படும் ரசாயன பொருளான நிலக்கரி சாம்பலை ராட்சத கலவை இயந்திர லாரியில் ஏற்றிக்கொண்டு ராஜேஸ் (36) என்பவர் இன்று அதிகாலை 5 மணியளவில் லாரியை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.

அப்போது சென்னை மதுரவாயில் பைபாஸ் வழியாக அடையாளம் பட்டு அருகே வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ராஜேஷுக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உத்தரபிரதேச மாநிலச் சேர்ந்த ராஜேஷ் லாரியை ஓட்டி கொண்டு வந்திருந்த போது தூங்கியதால் சாலை ஓரம்  தடுப்புகளில் மோதியுள்ளார்.

இதனால் லாரியின் டயர் வெடித்து லாரி கவிழ்ந்து உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் லாரி சாலை ஓரம் கவிழ்ந்ததால் போக்குவரத்து நெறிசல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சீர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிலக்கரி சாம்ல் லாரியில் உள்ளதால் மொத்தமாக  50 டன் எடை உடைய லாரியைய் தற்போது வரை அப்புறப்படுத்த முடியாமல்  போலீசார் திணறி வருகின்றனர் பெரிய ராட்சத கிரேன் வரததால் கவிழ்ந்த ராட்சத லாரி 7 மணி நேரம் சாலை ஓரத்திலேயே கிடப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com