சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த 4 காமக்கொடூரர்கள்...

திருக்கோவிலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த 4 இளைஞர்களில் ஒருவரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த 4 காமக்கொடூரர்கள்...

திருக்கோவிலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த 4 இளைஞர்களில் ஒருவரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் பாரதி, பிரபா, கோபி மற்றும் அருள். இவர்கள் 4 பேரும் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை காரில் கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து அந்த சிறுமிக்கு 4 பேரும் சேர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனை யாரிடமாவது கூறினால்  கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமி அவருடைய தாயிடம் கூறியுள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பாரதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 இளைஞர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.