மின்சாரம் தாக்கி கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு...

மின்சாரம் தாக்கி கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு...

சென்னையில் மின்சாரம் தாக்கியதால், கணவன் மற்றும் மனைவி ஒரே நேரத்தில் உயிரிழந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சென்னை : கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மூர்த்தி ஓய்வு பெற்ற வருமானவரித்துறை அதிகாரியாவார். இவரது மனைவி பானுமதி தடயவியல் துறை துணை கண்காணிப்பாராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மூர்த்தி மற்றும் அவருடைய மனைவி பானுமதி வெளியே செல்வதற்க்காக வந்துள்ளனர். இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்வது தெரியாமல் மூர்த்தி திறந்து உள்ளார். அவர் மீது மின்சாரம் பாய்ந்து அருகில் இருந்த அவர் மனைவி மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.

இதைப் பார்த்த எதிர் வீட்டில் வசித்து வந்த வெங்கட்ராமன் என்பவர் உடனடியாக அங்கு சென்று  கேட்டை தொட்டபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது சுதாரித்து கொண்டு மின்சார இணைப்பை துண்டித்த வெங்கட்ராமன், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக அங்கு வந்த அசோக் நகர் காவல்துறையினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் உடலையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com