தேனியில் காப்பகத்தில் இரண்டு குழந்தைகளுடன் தங்கியிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் லாரி ஓட்டுநராக இருந்து வருகிறார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் உமாமகேஸ்வரி தனது குழந்தைகளுடன் தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டியில் உள்ள தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான காப்பகத்தில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் காப்பகத்தின் உள்ளே சென்று அரிவாளால் துரைபாண்டியன் தனது மனைவியை கொடூரமாக கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உமாமகேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, துரைப்பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.