திருச்சியில் பரபரப்பு...2 பெண் சடலங்கள் மீட்பு...போலீசார் விசாரணை!

திருச்சியில் பரபரப்பு...2 பெண் சடலங்கள் மீட்பு...போலீசார் விசாரணை!

திருச்சி அருகே 2 பெண் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள்மலையில் பாலத்திற்கு அடியில் 2 பெண் சடலங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாலத்திற்கு கீழே இருந்த புதர்களுக்கு மத்தியில் கிடந்த சுமார் 50 வயது மதிக்கதக்க 2 பெண் சடலங்களை மீட்டனர்.

அப்போது, அந்த சடலங்கள் அருகில் கிடந்த ஒரு பையில் ஆதார் அட்டை , குடும்ப அட்டை மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்டவை இருந்துள்ளது. அவற்றை கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு, அவர்கள் இருவரும் துறையூர் அடுத்த பகளவாடி கிழக்குத் தெருவைச் சேர்ந்த சம்பூர்ணம், பெரியம்மா  என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து 2 பெண்களின் சடலங்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த 2 பெண்களும் இறந்ததற்கு குடும்பப் பிரச்னையா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, பெருமாள் மலையில் இரண்டு பெண்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com