பேஸ்புக் மூலம் பழகி 5 மாநிலங்களுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஜிம் மாஸ்டர்!! விசாரணையில் அம்பலம்

முகநூல் மூலம் பழகி மாணவியை 5 மாநிலங்களுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த  ஜிம் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
பேஸ்புக் மூலம் பழகி  5 மாநிலங்களுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஜிம் மாஸ்டர்!! விசாரணையில் அம்பலம்

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். ஜிம் மாஸ்டரான இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் இருந்த நிலையில் அவர்கள் 2 பேரும் குடும்ப தகராறு காரணமாக நரசிம்மனை பிரிந்து சென்று விட்டனர். இதற்கிடையில்  தனியாக வசித்து வந்த நரசிம்மனுக்கு முகநூலான பேஸ்புக் மூலம்  தர்மபுரி மதிகோன்பாளையத்தை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அது காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதியன்று பெங்களூருவில் இருந்து நரசிம்மன் மோட்டார் சைக்கிளில் தர்மபுரி வந்துள்ளார். அப்போது அவர் முகநூல் மூலமாக பழகிய மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி  கடத்தி சென்றுள்ளான்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில்  இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது அவர்கள் மாணவியின் சமூகவலைத்தள கணக்குகளை ஆய்வு செய்தும், நரசிம்மனின் செல்போன் எண்ணை கொண்டும் அவரை தேடி வந்தனர்.

இந்த தேடுதல் வேட்டையில்,   தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் இஷ்ணாபூரில் ஜிம் மாஸ்டர் நரசிம்மனை கையும் களவுமாக போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பள்ளி மாணவியை கடத்தி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு மோட்டார் சைக்கிளிலேயே அவர் கடத்திச்சென்றது தெரிய வந்தது.

மேலும், ஆசைவார்த்தை கூறி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்ததும், தற்போது மாணவிக்கு 8 மாத ஆண் குழந்தை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் நரசிம்மனை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் தெலுங்கானாவில் மறைத்துவைத்திருந்த மாணவி மற்றும் அவரது 8 மாத குழந்தையை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு  போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com