சாக்லேட் கொடுப்பதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்...

வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகளை குறி வைத்து தாக்கும் கொடூரன் ஒருவன், கள்ளக்குறிச்சியில், 13 வயது சிறுமியை சாக்லேட் தருவதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான்.
சாக்லேட் கொடுப்பதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள வெள்ளிமலை தால்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். 30 வயதான இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், லோகேஷ் என்ற மகனும் உள்ளனர். 

சிறு வயதில் ஒரு ஆண் குழந்தையை வளர்த்து வந்தபோதும், பக்கத்து வீட்டில் குடியிருந்த விவசாயக்கூலித்தொழிலாளியின் வீட்டையே சுற்றி சுற்றி வந்திருக்கிறார் பாலமுருகன். அப்போது ஒரு நாள் வீட்டுக்குள் புகுந்த பாலமுருகன் அங்கு 13 வயது சிறுமி ஒருவர் மட்டும் தனியே இருப்பதைக் கண்டு உள்ளே சென்றான். 

வீட்டில் யாரும் இல்லையா பாப்பா? என்று கேட்டதற்கு, அம்மாவும் அப்பாவும் வெளியே சென்றுள்ளனர் என அந்த சிறுமி பதிலளித்திருக்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாலமுருகன், சிறுமியின் அருகே சென்று சாக்லேட் வாங்கித் தருவதாக கூறினான். 

என்ன வகையான சாக்லேட் பிடிக்கும் என்று கேட்டுக் கொண்டே, சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் கை வைக்கத் தொடங்கினான். செய்வதறியாது திகைத்து நின்ற அந்த சிறுமி கத்தி ஊரைக் கூப்பிட்டு விடக்கூடாது என எண்ணியவன், வாயையும் பொத்திக் கொண்டான். 

பின்னர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காமுகன், நடந்ததை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டிச் சென்றான். இருந்தாலும், இதைப் பற்றி உறவினர்களிடம் அந்த சிறுமி சொன்னதையடுத்து ஆவேசத்துடன் பாலமுருகனைத் தேடிச் சென்றனர். 

தன்னைத் தேடி வருவதை அறிந்த பாலமுருகன் காட்டுப்பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். இதுகுறித்து சிறுமியின் தாயார் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து வெள்ளிமலை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த பாலமுருகனை சுற்றி வளைத்துப் பிடித்து சிறையில் அடைத்தனர். 

சாக்லேட் தருவதாய் கூறி 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்த காமக்கொடூரனின் இந்த செயலைக் கண்டு அவனது மனைவி, பிள்ளைகளே குறுகிப் போய் உள்ளனர். இத்தகைய மனநோயாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாய் உள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com