கத்திமுனையில் வழிப்பறி - அதிமுக பிரமுகர் உட்பட இருவர் கைது...

நடந்து சென்ற இளைஞரை கத்தியால் கீறி தாக்கி 10,000 பணம் பறித்த வழக்கில் அதிமுக நகர இளைஞர் பாசறை செயலாளர் உட்பட இருவர் கைதாகியுள்ளனர்.

கத்திமுனையில் வழிப்பறி - அதிமுக பிரமுகர் உட்பட இருவர் கைது...

கரூர் | மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருவை சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் கொழந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் (35), சுரேஷ் (32) ஆகிய இருவரும், அந்த இளைஞரை தாக்குதல் நடத்தி கத்தியால் கீறி காயம் ஏற்படுத்தி 10,000/- ரூபாய் பணத்தை பறித்தனர்.

இது குறித்து அளித்த புகாரில், இருவரையும் கைது செய்த தாந்தோணிமலை காவல் நிலைய போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர். இதில் மகேந்திரன் மத்திய மேற்கு நகர அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சந்தனக் கட்டைகளை கடத்திய 4 பேர் கைது...