காதலித்து திருமணம் செய்த மனைவியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வாழ்வதாக மூன்று பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பெண்.
காதல் திருமணம்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த தணிகாசலம் கடந்த 2008 ஆம் ஆண்டு கலைச்செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு சரண்யா, தரண்யா, பாலமுருகன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படாத புகார்:
இந்நிலையில் தணிகாசலம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக நான்கு முறை காவல் நிலையம் மகளிர் மன்றம் என புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தனது மூன்று குழந்தைகளுடன் கலைச்செல்வி புகார் மனு அளிக்க வந்தார்.
மாவட்ட வருவாய் அலுவலரிடம்:
மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவனிடம் மனு அளித்த பெண் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணவரோடு சேர்த்து வைக்க வேண்டும் எனவும், காவல்துறையினரிடம் புகார் அளித்த நடவடிக்கை இல்லை என கண்ணீரோடு தெரிவித்தார்.
புகார்:
அதேபோல விருதாச்சலம் பகுதியை சேர்ந்த கற்பகம் என்பவர் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களை விட்டுச் சென்றதாகவும், வேறு பெண்ணோடு குடும்பம் நடத்தி வருவதாகவும் கூற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
எதிர்பார்ப்பு:
குடும்ப நல வழக்குகளினால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தை விட நீதிமன்றத்தில் சென்று உரிய தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை எளிய மக்களிடம் தமிழ்நாடு அரசு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
இதையும் படிக்க: தொடரும் மரணங்கள்... முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?!!