திருச்சி மாவட்டத்தில் லாாியும், ஆம்னி வேனும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 6 போ் உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாசி அருகே மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாாி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த ஓம்னி வேனும், லாாியும் நேருக்கு நோ் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓம்னி வேனில் பயணம் செய்த குழந்தை உள்பட 6 போ் சம்பவ இடத்திலேயே உயிாிழந்த நிலையில், மேலும் 3 போ் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் விபத்து நடந்த இடத்தில் நோில் சென்று ஆய்வு செய்தாா்.
இதையும் படிக்க: இரண்டாவது நாளாக தொடரும் மழை...!!