14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது...

14 வயது பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது...

தேனி | பெரியகுளம் அருகே உள்ள சருத்துபட்டி பகுதியில்  தென்கரை காவல் நிலைய எள்கைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் முனீஸ்வரன் (32). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் அவரின் உறவினரின் வீட்டில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை வீட்டில் தனியாக இருந்த பொழுது பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் முனீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் விசாரணைக்கு பின்  முனீஸ்வரன் மீது போக்கோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பெரியகுளம் சார்பு நீதிமன்ற நீதிபதி முன் நிறுத்தியதை தொடர்ந்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து இளைஞரை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com