நடு ரோட்டில், பெற்ற தந்தையை கட்டையால் அடித்த கொடூரக்காரன்!! வைரல் வீடியோ!

ஜோத்பூரில், பெற்ற தந்தையை கட்டையால் அடித்த வீடியோ வைரலானதை அடுத்து இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நடு ரோட்டில், பெற்ற தந்தையை கட்டையால் அடித்த கொடூரக்காரன்!! வைரல் வீடியோ!

ராஜஸ்தான்: ஜோத்பூர் பகுதியில், தந்தையும் மகனும் ஏதோ வாக்குவாதத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், திடீரென, வெள்ளை சட்டை அணிந்த மகன், தெருவில் கிடந்த கட்டையை எடுத்து அடிக்கத் தொடங்குகிறார். அவரது வயதான தந்தை, சட்டை அணியாத நிலையில், கை கூப்பி, அடிக்க வேண்டாம் எனக் கெஞ்சுகிறார். ஆனாலும் நிறுத்தாமல் அடித்து அவரை மிரட்டும் படியாக இருக்கிறது.

பின், விரக்தியில் அந்த கட்டையை தூக்கி எரிந்து விட்டு சென்ற நிலையில், அக்கம்பக்கத்தினர், அவரை வெகு தூரத்தில் இருந்து கேள்வி கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதில் மேலும் ஆத்திரம் அடைந்து மீண்டும் தந்தையை அடிக்க வருவதாகத் தெரிகிறது. வாக்குவாதம் தொடர்ந்ததால், அவர் தனது தந்தையை அறைந்து, கோபமாக குத்தத் தொடங்கினார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட சிசிடிவி காட்சி, இணையத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பிய நிலையில், அவர் குற்றப்பிரிவு 151 SHO Ratanada PS- இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அந்த மகன், முந்தைய நாளும் கொடூரமாக தந்திஅயைத் தாக்கியதாகவும், குடும்ப தகராறு காரணமாக கோபத்தில் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம், இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.