மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கடலில் குதித்து தற்கொலை...

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கடலில் குதித்து தற்கொலை...

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம்  வார்ப்பு பகுதியில் மீன் ஏலம் விடும் பகுதியில் உள்ள கடலில் சுமார் 60 வயதுடைய பெண் இறந்து சடலமாக மிதப்பதாக மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இராயபுரம் தீயணைப்பு துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இராயபுரம் தர்கா காலனி சேக் மேஸ்திரி தெருவைச் சேர்ந்த 60வது வயதுடைய சபிரா பீ என தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com