விடுதியில் விபச்சாரம் நடத்திய 3 போ் கைது...

மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட அழகி மற்றும் விடுதி உரிமையாளர் கைதாகியுள்ளனர்.
விடுதியில் விபச்சாரம் நடத்திய 3 போ் கைது...
Published on
Updated on
1 min read

நீலகிரி | எம் பாலடா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சந்தோஷ் (38) இவர் தன் மனைவி இரண்டு மகனுடன் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார்.

இவர் காய்கறிகளை மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்து விட்டு களைப்பாக இருந்ததால், கல்லார் பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான கல்லால் காட்டேஜில் தங்கி ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என்று ரூம் புக் செய்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்து பின்னர் பெயர் விலாசம் கேட்டு தெரிந்து ராஜூ சுந்தர் என்பவர் புக்கிங் செய்து கொடுத்ததாகவும், அப்போது அவர் எங்க காட்டேஜில் ஜாலியாக இருக்க அழகான பெண்கள் என்றும் உள்ளே அழைத்து சென்றதாகவும் காட்டேஜில் மற்றொரு அறையில் இருந்த ராஜ்குமார் என்பவரிடம் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அவர் ரூபாய் 2000 கொடுத்தால் விதவிதமான பெண்களை வெளியில் இருந்து வரவழைத்து தருவதாக கூறியுள்ளார். இதை அடுத்து சந்தோஷ் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் கருப்புசாமி விக்னேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின், அங்கு இருந்த பெண் மற்றும் லாட்ஜின் உரிமையாளர் மேட்டுப்பாளையம் ஊட்டி ரோடு ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த பெரிய பாண்டி மகன் ராஜ்குமார் (38), மேட்டுப்பாளையம் கல்லார் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் மகன் ராஜ் சுந்தர் (31) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்தனர் நீதிபதி ராஜ்குமார் மற்றும் ராஜ் சுந்தரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணை கோவை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com