இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் மீது பண மோசடி புகார்!!!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய அறுவை சிகிச்சை மருத்துவ சங்கம் சார்பாக ஏ. ஆர்.ரகுமான் நிறுவனத்தின் மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அறுவை சிகிச்சை மருத்துவ சங்கம் சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், " தமது சங்கம் சார்பாக கடம்த 2018 ஆம் ஆண்டு டிசம்ப்ர் 26 முதல் 30 வரை தேசிய மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தோம். அந்த மாநாட்டில் ஏ. ஆர்.ரகுமான் இசை நிகச்சி நடத்துவதற்காக முன்பணம் 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அரசிடம் இருந்து மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகையால் கொடுத்த முன்பணம் திருமப வேண்டும் என ஏ. ஆர். ரகுமான் நிறுவனத்திற்கு இந்திய  அறுவவை சிகிச்சை மருத்துவ சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது" எங்க குறிப்பிடபட்டுள்ளது.

மேழும், "அதற்கு ஏ. ஆர் ரகுமான் நிறுவனம் சார்பாக பணம் தருவதக ஒப்புக் கொண்டு 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அதனை வங்கியில் செலுத்தும் போது அது பெளன்ஸ் ஆனது. இது குறித்து மீண்டும் ஏ. ஆர்.ரகுமான் நிறுவனத்திடம் முறையிட்டோம். ஆனால் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தப்பட்டது. 5 வருடமாக அந்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால்,  ஏ. ஆர். ரகுமான் நிறுவனம்  தரவே இல்லை. எனவே பண மோசடி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்நிலையில், இதற்க்கு பதிலளிக்கும் வகையில், ஏ. ஆர்.ரஹ்மானின் செயலாளர் செந்தில்வேலன் "3 கோடிக்கு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டதாகவும், அதற்கு முன் தொகையாக இந்த தொகை வழங்கபப்ட்டதாகவும், அவர்களே நிகழ்ச்சியை ரத்து செய்ததாலும், ஒப்பந்தத்தின் படி அந்த பணத்தை திருப்பி தரவில்லை என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பணத்தை தந்ததாகவும்" தெரிவித்துள்ளார். 

அதே போல ஜிஎஸ்டிக்கான தொகைக்கான கட்டணத்தையே காசோலையாக கொடுத்ததாகவும், அது பணம் இல்லாமல் திரும்பியவுடன் அதற்கான பணத்தை திரும்ப பெற்றுகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || தூத்துக்குடி சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு!!