கிருஷ்ணகிரி | சூளகிரியில் இருந்து பேரிகை நோக்கி தனியார் பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது புலியரசி என்ற கிராமத்தின் அருகே வனப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய பேருந்து அப்பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக பேருந்தில் இருந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் பேருந்து கவிழ்ந்து 10 மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் சூளகிரி வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த உணவு விடுதில் திடீர் தீ விபத்து...!!!