கோயில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்... சிசிடியாவால் கைது!!!

கோயில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்... சிசிடியாவால் கைது!!!

புதுச்சேரியில் கோயில் உண்டியலை உடைத்து திருடி சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு புவன்கரே வீதியில் அமைந்துள்ளது விநாயகர் கோயில்.  இந்த கோயில் முன்பு வைத்திருந்த உண்டியலை நேற்று அதிகாலை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக கோயிலின்  அறங்காவலர் நடராஜன் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை  ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் கோயில் உண்டியலை  கையில் எடுத்து கொண்டு சாலையில் நடந்து செல்வது பதிவாகி இருந்தது.  இதித் தொடர்ந்து அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் நெல்லிதோப்பு கண்ணார வீதியை சேர்ந்த ஜோதி (43) என்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட உண்டியலை பறிமுதல் செய்து  அவரை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com