அறுவை சிகிச்சையின் போது அலட்சியம்?  கவலைக்கிடமான பெண்ணின் உடல்நிலை   

அறுவை சிகிச்சையின் போது அலட்சியம்?  கவலைக்கிடமான பெண்ணின் உடல்நிலை  

திருவண்ணாமலை அருகே தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால், பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறிவிட்டதாகக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Published on

திருவண்ணாமலை அருகே தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால், பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறிவிட்டதாகக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வரகூர் கிராமத்தை சேர்ந்தவர்  ராஜகுமாரி. 38 வயதான இவருக்கு, கர்ப்பப்பையில், நீர் கட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சையில் தவறு நிகழ்ந்ததாகவும், இதனால், ராஜகுமாரியின்  உடல்நிலை மோசமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. தவறை சமாளிப்பதற்காக,  தனியார் மருத்துவமனையின் மருத்துவர் கதிரவன் என்பவர் உறவினர்களின் அனுமதி இன்றி, தனது சொந்த காரில் ராஜகுமாரியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனை அறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, ராஜகுமாரி ஆபத்தான நிலையில் இருப்பதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், தனியார் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com