சிறுமியை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த முதியவர் போக்சோவில் கைது!

திருவள்ளூர் மாவட்டத்தில் 12 வயது  சிறுமியை கட்டிப் பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் - புட்லூர் சாலையில் வசித்து வருபவர் முருகன். இவர் கட்டிட தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே தனியாக சென்று கொண்டிருந்த 8 ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியை கட்டிப் பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ந்து போன சிறுமி வீட்டிற்கு சென்று தனது தாயிடம் தெரிவித்துள்ளார். உடனே சிறுமியின் தாய் முருகனிடம்  கேட்டபோது, அதற்கு அவர் தரக்குறைவாக பேசி துரத்தியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து பட்டாபிராம் பகுதியில் பதுங்கியிருந்த முருகனை  போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் முருகன் புழல் சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.