ஒரே தெருவில் ராணுவ வீரர் மற்றும் காவலர் வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு...

ஒரே தெருவில் ராணுவ வீரர் மற்றும் காவலர் வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு...

ராணிப்பேட்டை | சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ குப்புராஜ்  என்பவரின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள்  பூட்டை உடைத்து வீட்டில் இருந்த   பிரோவை உடைத்து, 10 சவரன் தங்க நகை,அரை கிலோ வெள்ளி ,20, 000 ரொக்க பணம் திருடி சென்று உள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரர் குப்புராஜ் குடும்பத்தினர் ஹைதராபாத் சொந்தக்காரர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர். தொடர்து  அதே தேர்வை சார்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குமார்  என்பவரின் வீட்டை பூட்டை உடைத்து தங்க நகை ரொக்க பணம் திருடிச்சென்றுள்ளனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் எவ்வளவு பணம் நகை திருடப்பட்டுள்ளது என தெரியவில்லை. காவல் ஆய்வாளர் குடும்பத்தினர் சென்னை மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இவர் வீட்டில் யாரும் இல்லை இதை அறிந்த திருடர்கள் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த கொண்ட பாளையம் காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தி வருகிறார். அருகாமையில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | வடிகால் வாய்க்காலுக்காக தோண்டப்பட்ட பள்ளம்...! புகார் மனு அளித்த வர்த்தக சங்கத்தினர்...!