ஆபரேஷன் பிடி ஆணை.... 48 மணிநேரத்தில் 1004 பிடிவாரண்ட்...!!!

ஆபரேஷன் பிடி ஆணை.... 48 மணிநேரத்தில் 1004 பிடிவாரண்ட்...!!!

ஆபரேஷன் பிடி ஆணை என்கிற நடவடிக்கையை சென்னை காவல்துறை தொடங்கி 48 மணி நேரத்தில் 1004 பிடிவாரண்ட் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டு இருந்த பிடி ஆணை வாரண்ட் அதாவது ஜாமினில் வெளிவர முடியாத பிடி ஆணைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையிடம் அறிக்கை கோரி இருந்தது.  இது தொடர்பாக அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் பிடி ஆணைகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டு இருந்த பிடிவாரண்ட் உடனடியாக நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் எனவும் வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.  அதன் அடிப்படையில் நீதிமன்றம் அந்த கடிதத்தை ஏற்று காவல்துறையிடம் அறிக்கையாக சமர்ப்பித்திருந்தது. 

அந்த அறிக்கையின் படி நீதிமன்றங்களால் நிறைவேற்றப்பட்டிருந்த பிடிவாரன்ட் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை 10 நாட்களுக்குள் பிடிப்பதற்காக ஆபரேஷன் பிடி ஆணை என்கிற நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை 10 நாட்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை ஆஜர்படுத்துமாறு தமிழ்நாடு முழுதும் உள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி முதல் 48 மணி நேரத்தில் 1004 பிடிவாரன்ட் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை செய்தி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com