ஒரே விபத்தில் இரண்டு பேர் பலி... சிறு குழந்தையும் இறந்ததால் பரபரப்பு...

கவனக்குறைவாக டிராக்டரை இயக்கிய போது தவறி விழுந்து சிறுவன் ட்ரெய்லர் சக்கரத்தில் சிக்கி பரிதாப பலியாகியுள்ளார்.

ஒரே விபத்தில் இரண்டு பேர் பலி... சிறு குழந்தையும் இறந்ததால் பரபரப்பு...

திருப்பூர் | பல்லடம் அருகே கேத்தனூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்த வீர முத்து துளசிமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்களில் பவித்ரன் (6) வீட்டாருகே உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் இன்று காலை ரோட்டோரமாக சிறுவனின் தாத்தா கோவிந்தசாமி நிறுத்தி விட்டுச் சென்ற டிரெக்ட்டாரில் ஏறி சிறுவன் பவித்ரன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சிறுவனின் தாத்தா கோவிந்தசாமி  டிரைலருடன் இணைக்கப்பட்டிருந்த டிரேக்டரை இயக்க முயன்றாதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ரஷ்யாவிற்கு எதிராக போலந்திற்கு உதவிக்கரம் நீட்டிய ஜெர்மனி......

அப்போது எதிர் பாராத விதமாக தவறிக் கீழே விழுந்த சிறுவன் மீது  டிரேலரின் சக்கரம் ஏறியதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சிறுவனை மீட்டு பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அங்கு சிறுவனின் உடலை பரிசோதத்த  மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இந்நிலையில் இதேபோல் பல்லடம் அருகே புத்திரச்சல்  பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமசாமி வயது 20 என்பவர் மீது எதிரி வந்த பனியன் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் படிக்க | திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை...

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை அடுத்து பேருந்து ஓட்டுனர் கதிர்வேலை கைது செய்து காமநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடத்தில் இன்று நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் ஆறு வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | பெண்களின் பாதுகாப்பு இந்த உலகில் மட்டுமல்ல, சொந்த வீட்டிலும் இல்லை...