புதுச்சேரியில் மதுபோதையில் பூக்கடை ஊழியரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி நகரப்பகுதியில் அமைந்துள்ள குபேர் அங்காடி வளாகத்தினுள் பூக்கடைகள் அமைந்துள்ளன. இந்த கடையில் காரைக்காலை சேர்ந்த அருளானந்தம் என்பவர் அங்கேயே தங்கி பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அருளானந்தம், அருகிலுள்ள பூக்கடைகளில் வேலை செய்யும் இருவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் மூவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அருளானந்தத்தை பக்கத்து கடையை சேர்ந்த இருவர் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.