சென்னையில் பிரபல உணவகத்தின் வெஜ் பிரியாணியில் கிடந்த இரும்பு துண்டை கண்டு அதிர்ச்சியடைந்து புகாரளிக்க முயன்ற வாடிக்கையாளருக்கு பில் கொடுக்க மறுத்த உணவகம்.
இரும்பு பிசிறு:
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள A2B அடையாறு ஆனந்த பவன் உணவகத்தில் பொதுமக்களில் ஒருவர் உணவருந்த சென்றுள்ளார். ஸ்பெஷல் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டவர் உணவில் இரும்பு துண்டு பிசிறு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பில் கொடுக்காமல்:
உணவக ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டபோது சாரி சார் குழம்பு கரண்டியதெல்லாம் உடைந்து விழுந்திருக்கலாம் கூறியதுடன் வாடிக்கையாளர் சாப்பிட்டதற்கு பில் கேட்டபோது கொடுக்காமல் பணமும் வாங்காமல் காத்திருக்க வைத்திருக்கின்றனர்.
கோரிக்கை:
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் உரிய வீடியோ ஆதாரத்துடன் உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ்அப் எண் வாயிலாக புகார் அளித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல உணவகத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் உணவு பிரியர்கள் இடையே ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: திடீர் ஆய்வு நடத்திய தலைமை செயலாளர்.... எதற்காக?!!