யார் அந்த வாடிக்கையாளர்..? கடைகளில் திருடும் நபருக்கு போலீஸ் வலைவீச்சு...

சென்னையில் வாடிக்கையாளர் போல் கடைக்குள் நுழைந்து செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
யார் அந்த வாடிக்கையாளர்..? கடைகளில் திருடும் நபருக்கு போலீஸ் வலைவீச்சு...
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று பாரதி மர்ம நபர் ஒருவர் தனது செல்போனை திருடிச் சென்று விட்டதாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் கடந்த 26 ஆம் தேதி வாடிக்கையாளர் போல் வந்த மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஸ்டூடியோவிற்குள் வந்ததாகவும், ஸ்டுடியோவில் ஆர்டர் கொடுப்பதுபோல் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டூடியோவிலுள்ள உள் அறைக்குள் தான் சென்று திரும்பி வந்து பார்க்கும் பொழுது, தனது செல்போனையும், அந்த நபரையும் காணவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இதனை அடுத்து ஸ்டூடியோவில் உள்ள சிசிடிவி காட்சியை தான் ஆய்வு செய்தபோது அந்த நபர் செல்போனை திருடிச் சென்றது பதிவாகியிருந்ததாகவும் கூறி தனது செல்போனை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடும் அந்த நபரை தேடி வருகின்றனர்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com