பாட்டிலுக்கு 10ரூ கூடுதல் என தட்டிக்கேட்ட மதுபிரியர்...கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்!!

பாட்டிலுக்கு 10ரூ கூடுதல் என தட்டிக்கேட்ட மதுபிரியர்...கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்!!

செங்கல்பட்டில் அரசு மதுக்கடையில், 10ரூ கூடுதலாக வசூலிக்கக்கூடாது என அரசு கூறியும், ஊழியர்கள் 10ரூ கூடுதலாக வசூலிக்கின்றனர், என தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்திய மதுபிரியரை, கொடூரமாக தாக்கியுள்ளார், அங்கிருந்த காவலர் ஒருவர்.

செங்கல்பட்டில் இயங்கி வரும் அரசு மதுபான கடை ஒன்றில், வழக்கம் போல் மது பிரியர்கள் மது வாங்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த காவலர்கள் இருவர், இளைஞர்கள் இருவர், மது பாட்டிலைகளை வாங்கி வண்டியில் வைத்துவிட்டு, அங்கிருந்து செல்ல முயன்ற பொழுது, அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.

இதனால் அந்த இளைஞர் தாங்கள் ஊரில் திருவிழா என்பதற்காக மது வாங்கியதாகவும், தாங்களும் அரசு ஊழியர்கள் தான் கூறியுள்ளனர். அதற்கு அவர்களிடம்,போலிஸிடமே சட்டம் பேசுகிறாயா...பார் இந்த வண்டி ஏலம் போகும் படி செய்கிறேன் என்று கூறியும், மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் அவர்களை திட்டியும், ஒரு காவலர் மட்டும் மதுபாட்டிலுடன் இருச்சக்கர வாகனத்தை அபகரித்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அங்கியிருந்த மற்றொரு காவலரை, இந்த சம்பவத்தை பார்த்த மற்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களிடம் அந்த காவலர் மாட்டிக்கொண்ட நிலையில், வாகனத்தை எடுத்துச்சென்ற காவலர்க்கு  போன் செய்து தன்னை பொதுமக்கள்  சூழ்ந்துக்கொண்டு கேள்வி கேட்பதகாக தெரிவித்தை தொடர்ந்து, மதுபாட்டில்களுடன் வாகனத்தை எடுத்துச் சென்ற காவலர், திரும்பி வந்து, இருசக்கர வாகனம் மற்றும் மதுபாட்டில்களை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, பொதுமக்களின் நலனுக்காக தான் இப்படி தாங்கள் நடந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

இதையெல்லாம் கண்டுகொண்டிருந்த மது பிரியர் ஒருவர், பொதுமக்களிடம் காவல்துறையினர் அதிகாரத்தை காட்டுவார்கள், இதோ இந்த மதுபான கடையில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதல் 10 ரூ, அரசு வாங்க கூடாது என்று கூறியும், பத்து ரூபாய் கூடுதலாய் வாங்குவதை கேட்க மாட்டார்கள் என்று தனது மனகுமுறலை வெளிப்படுத்தி கேள்வி எழுப்பிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த நகர உதவி காவல் ஆய்வாளர், அந்த நபரை கண்மூடித்தனமாக தாக்கி, ஓடு என  துரத்தியுள்ளார். காவலரின் இச்செயலைக் கண்டு, அங்கிருந்தவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

மது பிரியர்கள் கூறுகையில் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மது வாங்கும் வரும் நபர்களிடம்  அராஜகம் செய்யும் காவல்துறை மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிக்க: பறக்கும் ரயில்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த குழு நியமனம்!!