சொத்து தகராறு... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...!!!

சொத்து தகராறு... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...!!!

நாட்டறம்பள்ளி அருகே சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை கத்தியால் சரமாரியாக தாக்கிய அண்ணன் தம்பிகளின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த சித்தப்பன் மகன்கள் சிகாமணி, சிவலிங்கம், லட்சுமணன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  இந்த நிலையில் மூத்த மகனான சிகாமணி வெளியூர் சென்று ஒரு ஏக்கர் 15 சென்ட் அளவிலான இடத்தை சொந்தமாக வாங்கியுள்ளார்.  

இதனை சொந்தம் கொண்டாடும் வகையில் இரண்டு தம்பிகளனா சிவலிங்கம் மற்றும் லட்சுமணன் அவ்வப்போது சண்டைக்கு இட்டு வந்தனர்.  இந்த நிலையில் வாய் தகராறு அதிகமானதால் சிவலிங்கத்தின் மனைவி தீபா சிகாமணி வீட்டிற்குச் சென்று தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியினால் சிகாமணி மனைவி அம்சா மற்றும் அவருடைய மகன் ஸ்ரீதரன் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி கத்தி மற்றும் இரும்பு கம்பியை போன்ற ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த சிகாமணி மற்றும் அவருடைய மனைவி அம்சா மற்றும் அவருடைய மகன் ஸ்ரீதர் ஆகியோர் பலத்த காயத்தோடு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  மேலும் இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சொத்து பிரச்சனைக்காக அண்ணனை கத்தி மற்றும் கொடூர ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com