ஏலகிரி கொண்டை ஊசி வளைவில் விபத்து.... கோரிக்கை வைத்த மக்கள்!!

ஏலகிரி கொண்டை ஊசி வளைவில் விபத்து.... கோரிக்கை வைத்த மக்கள்!!

ஏலகிரி கொண்டை ஊசி வளைவில் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.  அதில் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா சென்று விட்டு திரும்பிய பொழுது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  அதிர்ஷ்டவசமாக நாலு சிறுவர்கள் உட்பட 10 பேர் சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உயிர் சேதம் இன்றி சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலா விரும்பிகள் ஏலகிரி சுற்றுலா தளத்தில் உள்ள படகு இல்லம் இயற்கை பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிய பொழுது இரண்டாவது வளைவான பாரதியார் வளைவில் வாகனம் கட்டுப்பாடு இழந்து தடுப்புச் சுவரைத் தாண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனத்திற்கு பின் தொடர்ந்து வந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறை சிறிய சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகளை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

நான்கு சிறுவர்கள் 6 பெரியவர்களுடன் விபத்துக்குள்ளான வாகனத்தில்  உயிர் சேதம் ஏதுமின்றி அனைவரும் தப்பித்தாலும் தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் குறுகிய  பாதை வளைவுகளை அகலப்படுத்த வேண்டும் தடுப்புச் சுவர்களை பலப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே வெகுவாக எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com