கைதான புல்லிங்கோஸ், கை வலியில் கதறல்...பரிதாபப்பட்டு மாவுக்கட்டு போட்ட போலீசார்!

கைதான புல்லிங்கோஸ், கை வலியில் கதறல்...பரிதாபப்பட்டு மாவுக்கட்டு போட்ட போலீசார்!

சென்னையில் வழிப்பறி செய்த மோதிரங்களுடன் புல்லிங்கோ பாடலுக்கு ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கேத்து காட்ட நினைத்த புல்லிங்கோஸ், மாவுக்கட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் பள்ளிக்கரையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் நேற்றைய முன்தினம் பணி முடித்துவிட்டு அவரது இருசக்கர வாகனத்தில் நண்பர் வெங்கடஷ் உடன் பள்ளிக்கரணை ஏரிக்கரை சாலை வழியாக சென்றுள்ளார். 

மின்வெளிச்சம் இல்லா இருள் சூழ்ந்த பாதையில் சதீஷ் மற்றும் வெங்கடேஷ் இருவரும் சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென வந்த மூன்று பேர் கொண்ட புள்ளிங்கோ கும்பல், இருவரையும் வழிமறித்து பலபலக்கும் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். 

கத்திய கண்டு அதிர்ந்து போன சதீஷ், தங்களிடம் பணம் இல்லை எனக் கூறி உள்ளார். பின்னர் சதீஷ அணிந்திருந்த  இரண்டு தங்க மோதிரத்தை, கத்தி முனையில் மிரட்டி கேட்டபோது, தர மறுத்ததால் சதிஷ் கையை கத்தியால் கீறிவிட்டு, மோந்திரத்தை தரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி, இரண்டு தங்க மோந்திரத்தையும் பிடுங்கிக் கொண்டு மூவரும் தப்பிச் சென்றுள்ளனர். 

பின்னர், வழிப்பறி செய்த மோதிரத்தை, அவர்கள் வைத்திருந்த கத்தியின் மேல் வைத்து, அருகில் மது பாட்டில்களையும் வைத்து, புல்லிங்கோ பாடல் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், மோதிரத்தை பறிகொடுத்த நபர், காவல் நிலையத்தில் புகாரளிக்க, புகாரின் அடிப்படையில் இரு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்ததால், அந்த பகுதி முழுதும் போலீசார் தீவிரமாக தேடியுள்ளனர். 

பின்னர் மூவரும் போதை தலைக்கேறி நிதானத்தை இழந்து ஒரே இடத்தில் கத்தியுடன் படுத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் மூவரையும் பிடிக்க அவர்களின் அருகில் சென்றபோது, கத்தியை காட்டி போலீசாரை மிரட்டியுள்ளனர்.

பின்னர், பள்ளிக்கரணை போலீசார் சுமார் 10க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று, மூவரையும் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

விசாரணையில் ஒருவரை வெட்டி கத்தி முனையில் கொலை மிரட்டல் விடுத்து இரண்டு தங்க மோந்திரத்தை பறித்து சென்றது, பள்ளிக்கரணையை சேர்ந்த 23-வயதான விக்னேஷ்,  20-வயதான கிங்ஸ்லி பால், 22-வயதான விஷ்ணு என்பது தெரியவந்துள்ளது. 

இதையும் படிக்க || "திமுக தொண்டர்கள் நினைத்தால், ஆடு பிரியாணியாக ஆக்கப்படும்", ஆர் எஸ் பாரதி காட்டம்!

மேலும், விக்னேஷ் மற்றும் கிங்ஸ்லி பால் இருவரும் ஏற்கனவே கொலை வழக்கில் சிறை சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. இரவில் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிச் செல்லும்போது, அருகில் இருந்த வீட்டின் மதில் சுவரை தாண்டி குதித்த விக்னேஷ், தவறி கீழே விழுந்து கை முறிவு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் காவல் நிலையத்தில் வலி தாங்க முடியாமல், போலீசாரிடமே கைக்கு சிகிச்சை அளிக்க அழைத்து செல்லும்படி கதறி அழுதுள்ளார். அவரின் நிலைமையை பார்த்து பரிதாபப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், மாவு கட்டு போட்டுள்ளனர், போலீசார்.

பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிக்க || போலி மருத்துவரின் தவறான சிகிச்சை...மாணவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!