இளம் பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு; போலீஸ் விசாரணை:

இளம் பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு; போலீஸ் விசாரணை:

ஜோலார்பேட்டை அருகே இளம் பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இது குறித்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை தொடர்வதாகத் தகவ்ல்கள் வெளியாகியுள்ளன.
Published on

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டல வாடி பகுதியில் வசிப்பவர் அலமேலு இவரது மகள் சந்தியா (22). இவருக்கும் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியில் வசிப்பவர் ராஜாமணி மகன் பிரபாகரன் (32). இருவருக்கும் பெற்றோர்கள் நிச்சயத்த படி திருமணம் நடைபெற்று மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஓசூர் பகுதியில் தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்யும் பிரபாகரன் அவ்வப்போது வீட்டிற்கு விடுமுறை எடுத்து வந்துள்ளார். வழக்கம் போல விடுமுறை முடித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு திரும்பி உள்ள நிலையில் நேற்று மாலை சந்தியா திடீரென வீட்டை விட்டு காணாமல் போய் உள்ளார். பதற்றம் அடைந்த உறவினர்கள் அனைவரும் பதட்டத்துடன் அங்குமிங்கும் தேடியுள்ளனர்.

பின், இன்று சுமார் 11 மணி அளவில் பக்கத்தில் இருந்த கிணறு வரை சென்றதை பார்த்ததாக சந்தியாவின் தாய் அலமேலு கூறியதின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை காவல் துறை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு சந்தியாவை கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர்.

 ஜோலார்பேட்டை காவல் துறை சடலத்தை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com