+1 மாணவியை இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த நபர்.! உடந்தையாக இருந்த நண்பர்களும் கைது.!  

+1 மாணவியை இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த நபர்.! உடந்தையாக இருந்த நண்பர்களும் கைது.!  

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை மலை அடிவாரத்திற்கு கூட்டிச் சென்று இரண்டு நாட்கள் உடன் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மற்றும் உடந்தையாக இருந்த இளம் நண்பர்கள் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது-


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அனந்தபாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கில் டோனிக் (வயது21). இவருக்கும் வாணியக்குடி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.


இதையடுத்து ஆல்டோ மைக்கிள் டோனிக், தனது காதலியான அந்த மாணவியை உலக்கை அருவி மலை பகுதியில் ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமியை இரண்டு நாட்கள் தங்கவைத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. 


இதையடுத்து மாணவியின் தாயார், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் செய்தார்.  அந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டார்.பின்னர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆல்டோ மைக்கிள் டோனிக்( 21)மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு  போலீசார் கைது செய்தனர்.


இந்த சம்பவத்தில் ஆல்டோ மைக்கிள் டோனிக் கின் நண்பர்களான கோட்டார் பகுதியை சேர்ந்த சூர்யா, கிஷோர் குமார், காட்வின் மேஸ்வாக் ஆகிய 3 பேரையும் மாணவி கடத்தல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததிற்கு மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்ததில் நண்பர்களான இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.


பின்னர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தாக 3 பேரையும் சேர்த்து 4 பேருக்கும் போஸ்கோ வழக்கு பதிவு செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பான காப்பகத்தில்  சேர்த்துள்ளனர்.