மாணவியை சீரழித்த பள்ளி ஆசிரியர்! பல மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்தது அம்பலம்!!  

மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியரை போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை அடுத்த பெரம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த, ஞானஸ்கந்தன் என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டு அவரது வகுப்பில் படித்த மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக கூறி மாணவிகளின் பெற்றோர்கள் மாவட்ட கல்வி இயக்குநரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்  அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், போலீசார் உதவியுடன்ஆசிரியர் ஞானஸ்கந்தன் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து மயிலாடுதுறையில் உள்ள கிளைச் சிறையில் அடைத்தனர்.