எட்டு வயது சிறுமி மீதான் பாலியல் வழக்கு... தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்....!!

எட்டு வயது சிறுமி மீதான் பாலியல் வழக்கு... தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்....!!

Published on

எட்டு வயது சிறுமியை பாலியல்  வன்கொடுமை செய்த உறவினர் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டை தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமியை, அவரது தாத்தா முறை உறவுகொண்ட இருவர், கடந்த 2019ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், இருவர் மீதும் அனைத்து மகளிர்  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி, இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி,  இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்..

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com